×

மோடி ‘ஓபிசி’ ஜாதியில் பிறக்கவில்லை: ராகுல்காந்தி பரபரப்பு தகவல்

ஜார்சுகுடா: பிரதமர் மோடி ‘ஓபிசி’ ஜாதியில் பிறக்கவில்லை என்றும் அவர் பொது பிரிவு ஜாதியில் பிறந்தவர் என்றும் ராகுல்காந்தி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ஒடிசாவில் யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ‘பிரதமர் மோடி, பொதுப் பிரிவு ஜாதியில் பிறந்தவர் ஆவார். அவர் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியில் (ஓபிசி) பிறக்கவில்லை. குஜராத் மாநிலத்தில் டெலி ஜாதியில் பிறந்தவர் ஆவார். கடந்த 2000ம் ஆண்டு ஓபிசி என்ற அடையாளத்தை பெற்றார். உண்மையில் அவர் பொது ஜாதி பிரிவில் பிறந்தவர் என்பதால் அவரது வாழ்நாள் முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த அனுமதிக்க மாட்டார். இதனை ஒவ்வொரு பாஜகவினரிடம் சொல்லுங்கள்’ என்றார்.

முன்னதாக பிரதமர் மோடி சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசும்போது, தன்னை இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், ‘பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்த தலைவர்களிடம் காங்கிரஸ் பாகுபாடை காட்டுகிறது. காங்கிரஸ் கட்சியும், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் ஓபிசிக்களுக்கு நீதி வழங்கவில்லை’ என்று குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், ராகுல்காந்தி தற்போது மோடியின் ஜாதி குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

The post மோடி ‘ஓபிசி’ ஜாதியில் பிறக்கவில்லை: ராகுல்காந்தி பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : Modi ,Rahul Gandhi ,Jharkhand ,OBC ,Former ,Congress ,president ,Odisha ,Dinakaran ,
× RELATED விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள...